போலீஸ் செய்திகள்...

மது பதுக்கியவர் கைது

தேனி: கருவேல்நாயக்கன்பட்டி பாலமுருகன் 54. இவர் அங்குள்ள தேவர் சிலை அருகே உள்ள காம்ப்ளக்ஸ் முன் 20 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலமுருகனை கைது செய்து,மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கிறார்.

லாட்டரி விற்ற இருவர் கைது

தேனி: கம்பம் வடக்கு எஸ்.ஐ., அரசு தலைமையிலான போலீசார் அங்குள்ள ஏ.எம்., சர்ச் தெருவில் ரோந்து சென்றனர். அப்போது உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெரு பரித்கான் 47, கம்பம் தாத்தப்பன்குளம் அப்பாஸ் 65 ஆகிய இருவர் தடை செய்யப்பட்ட அசாம் மாநில லாட்டரி சீட்டுகளுக்கான டோக்கன் களை வினியோகம் செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.786 மதிப்புள்ள 393 டோக்கன்கள், லாட்டரி விற்ற பணம் ரூ.15,800 வைத்திருந்ததை கைப்பற்றினர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

டூவீலர் மீது வேன் மோதி பொறியாளர் பலி

தேவதானப்பட்டி : தேனி கொடுவிலார்பட்டி அருகே சிவலிங்கநாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வலிங்கம் 32. திண்டுக்கல் வேளாண் துறை அலுவலகத்தில் உதவி பொறியளராக பணி புரிந்தார். இவர் தினமும் டூவீலரில் காலையில் திண்டுக்கல்லுக்கு சென்று இரவு வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு பணி முடிந்து வத்தலக்குண்டு பெரியகுளம் ரோடு, பெட்ரோல் பங்க் அருகே வரும்போது எதிரே வந்த வேன் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வலிங்கம் பலியானார். விபத்து ஏற்படுத்திய காட்ரோடு ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த வேன் டிரைவர் குருநாதனை 58. தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement