தொழிலாளியை மிரட்டிய 6 பேர் மீது வழக்கு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே தாழையூத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் 32, ஜஸ்டின் என்பவர் தென்னந்தோப்பில் கூலி தொழிலாளியாக இருந்து வந்தார். ஜஸ்டினுக்கும் வருஷநாடு வைகை நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது.

மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர்கள் தெய்வம், அரசன் உட்பட 6 பேர்கள் அலெக்ஸ் பாண்டியன் வேலை செய்து வந்த தென்னந்தோப்பிற்குள் நுழைந்து இங்கு வேலை செய்யக்கூடாது என்று ஆபாசமாக பேசி உள்ளனர். மீறி வேலை செய்தால் பிணமாக்கி விடுவோம் என்று மிரட்டி தோப்பில் உள்ள மெயின் கேட்டை பூட்டு போட்டு பூட்டி உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் மிரட்டிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement