'அனைத்து கட்சி கூட்டம்: த.மா.கா., பங்கேற்காது'

சென்னை :
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: காமராஜர் பெயருக்கும், புகழுக்கும், மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலையில், காமராஜர் பெயரில், ஒரு காய்கறி சந்தை உள்ளது. இது காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. தற்போது, இந்த சந்தை சீரமைக்கப்பட்டு, திறப்பு விழா நடக்கும்போது, 'கலைஞர் நுாற்றாண்டு சந்தை' எனப் பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது; இதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசன் நேற்று அளித்த பேட்டி:
மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது தி.மு.க., அரசு. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தி.மு.க., எடுத்த முடிவு பூமராங் ஆகி இருப்பதை மடைமாற்றவே அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதால், அதில் த.மா.கா., பங்கேற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு
-
சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது
-
ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்
-
ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!
-
ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு விசாரணை அறிக்கை வழங்க இயலாது; ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
-
அய்யா வைகுண்டர் சுவாமி 193வது அவதார தின விழா