போக்குவரத்து ஊழியர்களுக்கு இம்மாதம் ஊதிய ஒப்பந்தம்

சென்னை : போக்குவரத்து ஊழியர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்த இறுதிக்கட்ட பேச்சு, விரைவில் நடைபெற உள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 1.43 லட்சம் ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், இன்னும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.
போக்குவரத்து ஊழியர்களின், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, இதுவரை இரண்டு கட்ட பேச்சு நடந்தது.
கடந்த மாதம், 13, 14ம் தேதிகளில் நடந்த கூட்டத்தில், 80க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளிடம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு நடத்தினார். அப்போது, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என, அமைச்சர் உறுதி அளித்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: புதிய ஊதிய உயர்வு குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து, ஒரே கட்டமாக அமைச்சர் பேச்சு நடத்துவார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் நிலை குறித்து, விரிவாக எடுத்துரைக்கப்படும். பின்னர், ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியா, சீனா பொருட்களுக்கு பரஸ்பர வரி; அதிபர் டிரம்ப் பேச்சு
-
சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது
-
ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்
-
ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!
-
ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு விசாரணை அறிக்கை வழங்க இயலாது; ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
-
அய்யா வைகுண்டர் சுவாமி 193வது அவதார தின விழா