புதிய மாவட்டங்கள் அறிவிப்பது எப்போது?

பெங்களூரு: “இண்டி தாலுகாவை, மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,” என, அத்தொகுதி எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா, சட்டசபையில் வலியுறுத்தினார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

காங்., - யஷ்வந்த்ராய கவுடா: இன்டி தாலுகாவை மாவட்டமாக மேம்படுத்த வேண்டும். வளர்ச்சியை மனதில் கொண்டு, இது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். பல புதிய மாவட்டங்களுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. ராஜஸ்தான் போன்று புதிய மாவட்டங்கள் அறிவியுங்கள். அறிவிக்கும்போது, இன்டி தாலுகாவையும் கவனியுங்கள்.

வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா: தற்போதைக்கு புதிய மாவட்டங்கள் அறிவிக்க, அரசு முடிவு செய்யவில்லை. வரும் நாட்களில் தாலுகாக்கள், மாவட்டமாக அறிவிக்கப்படும்போது, இன்டி தாலுகா குறித்து பரிசீலிக்கப்படும்.

புதிய மாவட்டம் அல்லது தாலுகாக்களை அறிவிப்பது குறித்து, அரசு ஆலோசிக்கவில்லை. சில தாலுகாக்களை மாவட்டமாக அறிவிக்கும்படி கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து அரசு தீர்மானிக்கும்.

Advertisement