மதுரை காமராசர் பல்கலையில் தேசிய கருத்தரங்கு

மதுரை காமராசர் பல்கலைக்கழக மேலாண்மை துறையில் 'தொழில் 5.0'ல், 'மனிதனை மையமாகக் கொண்ட வழி செலுத்தல், நிலையான மற்றும் உறுதியான பரிமாணங்கள்' பற்றிய தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.அசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ்-யை மேலாண்மை துறை தலைவர் டாக்டர் பா. கண்ணதாசன் வரவேற்று பொன்னாடை போர்த்தினார்.

இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை மீனாட்சி கல்லூரி, தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் மற்றும் பாத்திமா கல்லூரி போன்ற கல்லூரிகளில் பயிலும் சுமார் 220 மேலாண்மை மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement