காஸ் சிலிண்டர் வெடித்து ஐந்து பேருக்கு தீக்காயம்

கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம், காந்தி நகர், 15வது தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி, 75. மனைவி ராணி, 70, மகள் சாந்தி, 45, மருமகன் ரகு, 48, பேரன் அஜித்குமார், 27, ஆகியோர், நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

சிலிண்டரை முறையாக அணைக்காததால், வீடு முழுதும் காஸ் கசிந்துள்ளது. நேற்று காலை ராணி எழுந்து, மின் விளக்கு ஸ்விட்ச்சை போட்டுள்ளார்.

அப்போது, காஸ் கசிவால் சிலிண்டர் வெடித்து, வீடு முழுதும் தீப்பற்றியது. இதில் முனுசாமி, ராணி, சாந்தி, ரகு, அஜித்குமார் ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டனர்; தகவலறிந்து வந்த போலீசார், ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement