திருவள்ளூர் - திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை கோரி மனு
சென்னை, திருவள்ளூரில் இருந்து திருச்சி, கோவைக்கு நேரடி பஸ் சேவை துவங்க கோரி, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம், திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை புறநகரில் முக்கிய ரயில் நிலையமாக திருவள்ளூர் இருக்கிறது. தினமும் 1.5 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான விரைவு ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. எனவே, இந்த வழியாக செல்லும் விரைவு ரயில்களை நிறுத்தம் வழங்க தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.
அதுபோல், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு இங்கிருந்து செல்ல துாரமாக இருக்கிறது. எனவே, திருவள்ளூரில் இருந்து சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் கோவை, புதுச்சேரிக்கு நேரடி பஸ் சேவை துவங்க வேண்டும். இங்கு புதிய பணிமனையும் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது