ரெனோ கார்களுக்கு 'சி.என்.ஜி., கிட்'

'ரெனோ' நிறுவனம், அதன் 'கைகர், ட்ரைபர் மற்றும் குவிட்' கார்களுக்கு, சி.என்.ஜி., கிட் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுவும், அந்நிறுவன விற்பனை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கார் பராமரிப்பு மையங்களில், இந்த சி.என்.ஜி., கிட்டை பொறுத்திக் கொள்ளலாம்.

இதற்கு, மூன்று ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. ஆனால், ஆலையில் கார் உற்பத்தியின் போது, சி.என்.ஜி., கிட் பொறுத்தப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், 1 லிட்டர் என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. டர்போ இன்ஜின் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ் கார்களுக்கு வழங்கப்படவில்லை.

Advertisement