வேந்தோணி கால்வாய் பாலம் சீரமைக்க வலியுறுத்தல்

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் வேந்தோணி கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளதால் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
பார்த்திபனுார் மதகு அணையிலிருந்து வலது, இடது பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கண்மாய்களை இணைத்துள்ளது. தேசிய, மாநில மற்றும் கிராமப்புற சாலைகளை குறுக்கிடும் பகுதிகளில் கால்வாய் மீது பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் தடுப்பு சுவர் சேதமடைந்து கம்பிகள் தெரிகின்றன.
மேலும் பாலத்தில் பக்கவாட்டு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள், நாணல்கள் மற்றும் தேவையற்ற மரங்கள் வளர்ந்து அதன் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதே போல் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதுடன், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.
இதனால் நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வுக்குள்ளாகிறது. கால்வாய்ப்பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து சீரமைக்க பொதுப்பணி துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை