ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

13


துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


கண்ணூரைச் சேர்ந்த முகமது ரினேஷ் என்பவர் அல் அய்ன் எனும் டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேபோல, கேரளாவைச் சேர்ந்த மற்றொரு நபரான முரளிதரன் என்பவருக்கு, இந்தியர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.


இதையடுத்து, இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, முகமது ரினேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோரை அதிகாரிகள் தூக்கிலிட்டனர்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையில் 28 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி குழந்தையை கொன்ற குற்றத்திற்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் தூக்கிலிடப்பட்டார்.

Advertisement