அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் பாதிப்பு: நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளில் ஏற்பட்ட சுணக்கம்

தேனி: மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் அதிகாரிகள் பணியிடம் பல காலியாக உள்ளதால் பொதுமக்களின் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. வரிவசூல்,குடிநீர் கட்டணம், வாடகை வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. தேனி இரண்டாம் நிலை நகராட்சியாகும். இந்நகராட்சியில் பொதுமக்கள் பல்வேறு சேவைகளுக்காக அலுவலகங்களை நாடினால் உரிய அதிகாரி இல்லை, அலுவலர் இல்லை என அலைகழிப்பு செய்கின்றனர். இதனால் சான்று பெறுதல், அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கின்றனர். சில நகராட்சிகளில் முக்கிய பணியிடங்களான கமிஷனர், பொறியாளர்,அலுவலக மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
29 பணியிடங்கள் காலி
தேனி நகராட்சியில் இன்ஜினியரிங் பிரிவில் செயற்பொறியாளர் , 3 உதவி செயற்பொறியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரு உதவி செயற்பொறியாளர் மட்டும் உள்ளார். ஆறுமாதங்களாக செயற்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப் பணியினை கூடுதல் பொறுப்பாக போடி நகராட்சி பொறியாளர் கவனிக்கிறார். ஒரு அலுவலர் இரு பணியிடங்களை கவனிப்பதால் நகரின் வளர்ச்சி பணிகள் பாதிக்கிறது. மேலாளர், கணக்கர், 2 தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளது. 12 பில் கலெக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் உள்ளனர்.
சுகாதாரப்பிரிவில் 6 ஆய்வாளர்கள் பதில் 3 பேர் உள்ளனர். நகரமைப்பு அலுவலர், 3 ஆய்வாளர்கள் இருக்க வேண்டியதில் ஒரு நகரமைப்பு ஆய்வாளர் மட்டும் உள்ளார். குடிநீர் வழங்கல் பிரிவில் ஒரு ஓவர்சியர் உள்ளார். ஒரு ஓவர்சியர்,5 ஆய்வாளர்கள் பணியிடம் காலியாக உள்ளன. தேனி நகராட்சியில் முக்கிய அலுவலர்கள் 29 பேர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே போல் கூடலுார் நகராட்சியில் கமிஷனர், நகரமைப்பு அலுவலர்கள் இல்லை. பெரியகுளம் நகராட்சியில் நகர்நல அலுவலர், சுகாதார அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.
பொதுமக்கள் சேவை பாதிப்பு
இதனால் பொதுமக்கள் முறையீட்டிற்கு நடவடிக்கை, சான்றுகள் வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. கட்டட அனுமதி, சர்வே பணிகளுக்கு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. சுகாதார பணிகள் தொய்வு. புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதில் சிரமம் என நகராட்சி பணிகள் முடங்குகின்றன. பணியில் உள்ள சில அலுவலர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளதால் அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். பொதுமக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் அலைகின்றனர்.
மேலும்
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்
-
பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!
-
மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி: வாசன் எதிர்ப்பு
-
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
-
ரவுடி படப்பை குணா கைது
-
செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா