ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: 'மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் ' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராகவும், ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி, மத்திய அரசை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்மொழி கல்விக் கொள்கையின் மீது அச்சுறுத்தல் போன்ற மாயையை பரப்புவதை முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமச்சீரற்ற கல்வி முறையை தடுப்பதற்காக, பா.ஜ.,வினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நாம் நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளனர்.
எத்தனையோ தடைகள் இருந்த போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ., கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடுவீடாகச் சென்று மும்மொழி கல்விக் கொள்கை குறித்து பிரசாரம் செய்து வருகின்றனர். மும்மொழி கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புக்கு மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெரிய வந்ததால், ஹிந்தி திணிப்பு என்ற கற்பனையை கையில் எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கூட தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக எந்த மொழி விருப்பமோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம். மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் 16வது திருத்தமான, பிரிவினை எதிர்ப்பு மசோதா, உங்கள் கட்சியின் பிரிவினைவாத கருத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். இந்த மசோதா, இன்று நீங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சியின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், புதிய கல்விக்கொள்கையில் பெரும்பாலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக உங்களின் பகுதிநேர கல்வித்துறை அமைச்சர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இன்று நீங்கள் புதிய கல்விக்கொள்கையை விஷம் என்று கூறுகிறீர்கள். உண்மையில், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.













மேலும்
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்
-
பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!
-
மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி: வாசன் எதிர்ப்பு
-
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
-
ரவுடி படப்பை குணா கைது
-
செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா