ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு சரமாரி கத்திக்குத்து; மயிலாடுதுறையில் வாலிபர் வெறிச்செயல்!

மயிலாடுதுறை: எதிரெதிர் வீட்டில் வசிப்பவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மயிலாடுதுறையில், ஓய்வுபெற்ற ஆசிரியை நிர்மலாதேவி என்பவரை கத்தியால் சரமாரியாக குத்திய பிரேம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2வது கிராஸ் பகுதியில் மாதவன், 62, என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா ,60, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர்களுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்ட நிர்மலாவை சிறிய கத்தியைக் கொண்டு பிரேம் 15க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். தடுக்க வந்த சேது மாதவனையும் பிரேம் கத்தியால் குத்தி உள்ளான்.
படுகாயம் அடைந்த சேது மாதவன் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக வாலிபர் பிரேமை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும்
-
நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து
-
ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி
-
ரவுடி கொலையில் ஒருவருக்கு தூக்கு தண்டனை : 4 பேருக்கு ஆயுள் : திருநெல்வேலி கோர்ட் தீர்ப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வீசிய ஊழியர்: வீடியோ வைரல்
-
பாலிவுட்டை விட்டு வெளியேறினார் டைரக்டர் அனுராக் காஷ்யப்!
-
மக்காச்சோளத்திற்கு 1 % செஸ் வரி: வாசன் எதிர்ப்பு