நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்: ஐகோர்ட் கருத்து

சென்னை: '' நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள்,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
சங்கம் ஒன்றுக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியை தூக்கிப் பிடிப்பார்கள். அதனை கைவிட மாட்டார்கள். நிலாவுக்கே சென்றாலும் ஜாதியை கொண்டு செல்வார்கள். படிப்படியாக மாற்றத்தை கொண்டு வர முடியும். அதற்கான நேரம் இது.
ஜாதிகள் இல்லையபடி பாப்பா என படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா? இந்த விவகாரத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால், வரலாறு அதனை நினைவில் கொள்ளும். கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயரை நீக்குவது, ஜாதி சங்கங்கள் பெயரை பதிவு செய்வதில் அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியதுடன், இதில் அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.










மேலும்
-
பாக்., ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: பயங்கரவாதி உ.பி.,யில் கைது
-
பெண்கள் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி: இ.பி.எஸ் கண்டனம்
-
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி: மக்காச்சோளம் மீதான செஸ் வரி வாபஸ்
-
மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
-
நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு
-
ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி