முதல்வர் -கவர்னர் மோதல் விரும்பதகாதது : கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை

கோல்கட்டா: முதல்வரும் - கவர்னரும் நீதிமன்றத்தில் சண்டையிட்டு கொள்வது விரும்பதகாதது என மேற்குவங்க முதல்வர் மீது கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்தாண்டு ஜூலையில் இரு திரிணாமுல் காங்., எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரம், கவர்னர் மாளிகை பெண் பணியாளர் கவர்னர் மீது பாலியல் புகார் கூறிய விவகாரம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் - கவர்னர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி வந்ததது.
இது குறித்து மேற்குவங்க தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் முதல்வர் மம்தா பேசும் போது, ‛‛சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் '' எனக் கூறியிருந்தார். இந்த கருத்தின் மீது ஆத்திரமடைந்த கவர்னர் ஆனந்த போஸ், மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் மீது கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணாராவ் முன் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வழக்கறிஞரும் காரசாரமாக வாதிட்டனர்.
நீதிபதி கிருஷ்ணாராவ் கூறியது, மாநில முதல்வரும், கவர்னரும் இப்படி நீதிமன்றத்தில் சண்டையிட்டு கொள்வது விரும்பதகாதது, இரு தரப்புக்கும் நல்லதல்ல. இருவரும் பரஸ்பரம் ‛தேனீர் அருந்தி ' சமரசம் செய்து கொண்டு பிரச்னையை தீர்த்து கொள்ளவதே சரியானது. இது வாய்மொழியான அறிவுரை அல்ல . இருதரப்பும் ஒத்துக்கொண்டால் எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பிக்கலாம் என்றார்.
மேலும்
-
'இந்தியாவில் சித்ரவதை செய்வர்' மும்பை தாக்குதல் பயங்கரவாதி வாதம்
-
'ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள்' ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
ஜெலட்டின் கடத்தல் வழக்கில்மேலும் மூன்று பேர் கைது
-
சேவை மையம் மூலம் நிலங்கள் அளவீடு விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கம்
-
காளியம்மன் கோவில் பண்டிகையைமுன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி
-
மண் பானை விற்பனை மும்முரம்