மண் பானை விற்பனை மும்முரம்
மண் பானை விற்பனை மும்முரம்
வெண்ணந்துார்:வெண்ணந்துார் பகுதியில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலுக்கு இயற்கையான, குளிர்ச்சி யான குடிநீர் வழங்கும் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.
தண்ணீர் பானை, கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்திலான மண் பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம், கொள்ளளவு அடிப்படையில், 250 முதல், 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மண்பானை தொழிலாளர்கள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண் பானை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும், 50 பானை விற்பனையாகிறது,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் லயன்ஸ் அணி கோப்பை வென்றது
-
பெஞ்சல்' புயல் பயிர் சேத நிவாரணம்... ரூ.161 கோடி; 1.61 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கல்
-
அங்காளம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
-
விபத்தில் இறந்த போலீஸ் ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்
-
பெண் காவலர்களுக்கு சிறப்பு சட்ட வகுப்பு
-
உலக பொறியியல் தின கருத்தரங்கம்
Advertisement
Advertisement