சேவை மையம் மூலம் நிலங்கள் அளவீடு விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கம்
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள அறிக்கை:நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று, விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி, தமிழக அரசால் 2023 நவ.,20ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சேவை மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இச்சேவையை, தமிழகம் முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ--சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிலஉரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நிலஅளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு மெசேஜ் அல்லது மொபைல் போன் வாயிலாக தெரிவிக்கப்படும்.
மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவை மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,
-
தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு
-
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
-
கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்
-
புகார் பெட்டி
-
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு