காளியம்மன் கோவில் பண்டிகையைமுன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி
காளியம்மன் கோவில் பண்டிகையைமுன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நடந்தது.
குமாரபாளையத்தில், நுாற்றாண்டு பழமைவாய்ந்த காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மகா குண்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. காளியம்மன் கோவில் வளாகத்தில் துவங்கிய தேரோட்டம், ராஜ வீதி, சேலம் சாலை வழியாக வந்து தம்மண்ணன் வீதியில் மதியம், 2:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 4:00 மணிக்கு துவங்கிய தேரோட்டம் அக்ரஹாரம் வழியாக சென்று இரவு, 7:00 மணியளவில் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் நாள் தேரோட்டம் இங்கிருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் இன்று தேர் நிலை சேர உள்ளது. இன்று இரவு வாண வேடிக்கை, நாளை ஊஞ்சல் விழா, மஞ்சள் நீர் திருவீதி உலா
நடைபெறவுள்ளது.
மேலும்
-
ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,
-
தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு
-
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
-
கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்
-
புகார் பெட்டி
-
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு