புதிய கல்வி கொள்கை ஆதரித்து பா.ஜ., கையெழுத்து இயக்கம்

திருப்பூர்; திருப்பூரில், புதிய கல்வி கொள்கையை ஆதரித்து, பா.ஜ., வினர் கையெழுத்து இயக்கத்தை நேற்று முதல் துவக்கினர்.

தமிழகம் முழுவதும் பா.ஜ., வினர் புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளனர். அவ்வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வினர் திருப்பூர் மாநகர பகுதியில் நேற்று துவக்கப்பட்டது. செரங்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் மந்திராசலமூர்த்தி, மாநில துணை தலைவர் கனகசபாபதி, தேசிய பொதுகுழு உறுப்பினர் மணி, முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

வீடு வீடாக சென்று புதிய கல்வி கொள்கை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி, படிவத்தில் கையெழுத்து பெற்று வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள 1033 'பூத்'களில் உள்ளவர்களிடம், கையெழுத்து பெறப்படும் என்று பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 அவிநாசி நகர பா.ஜ., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு நகர தலைவர் தினேஷ் குமார் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், நீலகிரி லோக்சபா தொகுதி இணை பொறுப்பாளர் கதிர்வேலன், சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கணியாம்பூண்டி செந்தில் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ஸ்ரீனிவாசன், அவிநாசி மண்டல தலைவர்கள் கணேசன், ஜெகதீஸ்வரன், ஜெயப்பிரகாஷ், பிரபு ரத்தினம், ஆனந்தன், ரத்தினசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement