தாராபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு

தாராபுரம்; தாராபுரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம், 1.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில், இ - ஸ்டாம்ப் அறை, அலுவலகம், உணவருந்தும் அறை, சரக்கு அறை உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளுடன், கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.

புதிய அலுவலகத்தில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, குத்துவிளக்கேற்றி, முதல் பத்திரப்பதிவை வழங்கி, மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, துணைப்பதிவு துறை தலைவர் பிரபாகர், மண்டல உதவி பதிவுத்துறை தலைவர் (சரகம்) ஸ்ரீ சித்ரா, மாவட்ட பதிவாளர்கள் ஜெயப்பிரகாஷ், முத்துக்குமார், தாராபுரம் சார் - பதிவாளர் உமா மகேஸ்வரி, தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement