ஆட்டோ சேதம்

புதுச்சேரி : புதுச்சேரி, 100 அடி சாலை வழியாக கடலுார் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று, லோடு ஏற்றிக்கொண்டு சென்றது. இந்திரா சதுக்கம் அருகே எதிர்பாராத விதமாக சாலையோர மரக்கிளையில் லாரியின் மேற்பகுதி மோதி சிக்கியது. டிரைவர் இதை கவனிக்காமல் லாரியை வேகமாக இயக்கியதால், மரக்கிளை திடீரென உடைந்து கிழே இருந்த ஆட்டோ மீது விழுந்தது.

இதில், ஆட்டோ சேதமடைந்தது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, மரக்கிளையை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement