இளம்பெண் மாயம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் அருகில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாசு மகள் முகமது ஆசிக்,18; நேற்று முன் தினம் காலை 9:00 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றன.

Advertisement