கலெக்டர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உலக மகளிர் தின விழா நடந்தது.

விழாவிற்கு டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். விழாவில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து மகளிரின் சிறப்புகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள் தங்களது அனுபவங்களை எடுத்துரைத்தனர்.

விழாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, மாவட்ட தாட்கோ மேலாளர் பியர்லின், கலெக்டர் அலுவலக மேலாளர்(நீதியியல்) இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement