சட்டசபை கணக்கு குழு ஆய்வு கடலுார் எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார் : தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் கடலுார் எம்.எல்.ஏ.,அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார், சேகர் உள்ளிட்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை பார்வையிட்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. கொடைக்கானல் கீழ்மலை பாச்சலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய 108ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 16 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 87ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். எஸ்.பி.,பிரதீப், வனஅலுவலர்கள் ராஜ்குமார், யோகேஷ்குமார், டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement