சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

கடலுார் : கடலுார் துறைமுகம் சங்கரா வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
வேல்விழி வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி ஆண்டறிக்கை வாசித்தார்.
கடலுார் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா சிறப்புவிருந்தினராக பங்கேற்று, நுாறுசதவீத வருகை தந்த மாணவர்கள் மற்றும் பள்ளியில் நடந்த தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் மஹாசுப்ரியா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. திறனறி தேர்வில் சிறப்பு பெற்ற மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பள்ளிக்கட்டண விலக்கு அளிக்கும் கடிதம் மாணவர்களின் பெற்றோர்க்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
லதா நன்றி கூறினார்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்