ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!

துபாய்; சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாசில் தோற்றாலும் புதிய சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.



துபாயில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொண்டது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஆஸ்தான போட்டியான இதில் இந்திய அணி டாசில் தோற்றது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


டாசில் இந்தியா தோற்றுவிட்ட போதிலும், அதில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்திருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. கேப்டனான அவர், எதிரணியினருடன் விளையாடும் போது, தொடர்ந்து 12வது முறையாக (இன்றைய ஆட்டத்துடன் சேர்த்து) டாசில் தோற்றிருக்கிறார்.


இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அதிக முறை டாசில் தோற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இவரும் 12 முறை டாசில் தோற்றிருக்கிறார்.


ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து அதிக முறை டாசில் தோற்றவர்கள் என்ற கேப்டன்கள் என்ற சாதனையை ரோகித் சர்மாவும், லாராவும் பகிர்ந்திருக்கின்றனர். 2வது இடத்தில் நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரான் உள்ளார். இவர் 11 முறை டாசில் தோற்றிருக்கிறார்.


ஒட்டு மொத்தமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என்ற 3 வகை போட்டிகளிலும் சேர்த்து தொடர்ந்து 15 முறை டாசில் தோல்வியை தழுவி இருக்கிறார் ரோகித்.

Advertisement