சமுதாயத்தின் சிற்பிகள் பெண்கள்; இன்பேண்ட் பள்ளி தாளாளர் பெருமிதம்

கடலுார், : விருத்தாசலம் இன்பேண்ட் பள்ளி தாளாளர் விஜயகுமாரி விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச்செய்தி:
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்ற வரிகள் மறைந்து, தினம் தினம் சாகசங்கள் படைக்கும் பெண்களுக்காகவே வருகிறது மகளிர் தினம். குடும்பத்தையும், நாட்டையும் கட்டமைக்கும் சமுதாயத்தின் சிற்பிகள் பெண்கள்.
பெண்கள் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல், கல்வியிலும் பொருளாதாரத்திலும் அவர்களை தனித்து நிற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் கால்தடம் பதிக்காத துறை என்று எதுவுமில்லை. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் கொண்டு பயணிக்க வேண்டும்.
நெடுமரமாய் நில்லாமல் நாணல் போல் வாழ வேண்டும். சுமைகள் தான் நம்மை உறுதியாக மாற்றும். சர்வ சுதந்திரத்துடன், ஆண் பெண் பேதம் இல்லாத சமுதாயம் அமைய, பாலியல் குற்றங்களை ஒடுக்க, அடிமைப்பட்டு கிடக்கும் பெண்களை மீட்டெடுக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என, தெரிவித்துள்ளார்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்