வள்ளி விலாஸ் ஆலயாவில் மகளிர் தின விழா

கடலுார் : நெல்லிக்குப்பம், வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மோகனசுந்தரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பல்வேறு துறைகளில் பணியாற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அழைத்து கவுரவிக்கப்பட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய இளங்கோவன், பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், பள்ளி உதவி தலைமையாசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரங்கோலி, கவிதைப்போட்டி, நெருப்பில்லா சமையல், சிகை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement