கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல்

கடலுார்: கடலுார் அருகே கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சி, வாத்துக்காரன் சந்து தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை,

நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கும் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று மாலை 4:45மணிக்கு கடலுார் பண்ருட்டி சாலையில் அப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து, 4:50 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement