பொதுக்குழு கூட்டம்

இளையான்குடி : இளையான்குடியில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி, மாவட்ட துணைச் செயலாளர் பஞ்சுராஜ், மாவட்ட துணைத் தலைவர் அமல சேவியர்,மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ஜேசு ராஜதுரை வரவேற்றார்.

இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்திற்கென்று தனியாக அலுவலகம் அமைக்க வேண்டும், வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை பணியில் அமர்த்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிளைப் பொருளாளர் மரியமலர் நன்றி கூறினார்.

Advertisement