மாவட்டத்தில் 'லோக் அதாலத்' ரூ.19.09 கோடிக்கு தீர்வு

கடலுார் : கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தலைமை தாங்கினார்.
குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி சோபனா தேவி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் முதலாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகராஜன், ஓய்வு பெற்ற நீதிபதி ரிச்சர்ட், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அன்வர் சதாத், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ்கண்ணன், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி கவியரசன், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி பத்மாவதி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி லலிதாராணி, நில எடுப்பு வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி நிஷா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 வனஜா முன்னிலை வகித்தனர்.
கடலுார் பார் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் செந்தில்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் அமுதவல்லி, செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விவாகரத்து வழக்கில் சமரசம் பேசி முடிக்கப்பட்டு 3 தம்பதிகள் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர். மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது.
மாவட்டம் முழுதும் வாகன விபத்து, ஜீவனாம்சம், நிலம் எடுப்பு, தொழிலாளர் நலன் மற்றும் குடும்ப நலன் என 5,824 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,841 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு 19கோடியே 9 லட்சத்து 3 ஆயித்து 556 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்