மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கல்

நெய்வேலி : என்.எல்.சி., நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 71 மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியின் விசுஷித் பாரத் எனும் தொலை நோக்கு திட்டததும் வகையில், என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வுத்துறை 71 மாற்றுத்திறனாளிகளுக்கு,செயற்கை கால்கள் உட்பட, செயற்கை உறுப்புகள் மற்றும் உதவிச் சாதனங்கள் வழங்கியது.

நெய்வேலி அருகே வள்ளலார் மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகள் 71 பேருக்கு நடைப்பயிற்சி கருவிகள், பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர மோட்டார் வண்டிகள், மூன்று சக்கர சைக்கிள் கைகளால் இயங்கும் மூன்று சக்கர வண்டிகள், வழக்கமான சக்கர நாற்காலி மடிப்பு கருவிகள் போன்ற உதவி கருவிகளை என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் வழங்கினார்.

என்.எல்.சி., செயல் இயக்குநர் நாராயண மூர்த்தி, என்.எல்.சி., மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார், நிதித்துறை தலைமைப் பொது மேலாளர் தனபால், சி.எஸ்.ஆர்.,துறையின் பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் பாபு உடனிருந்தனர்.

Advertisement