முதல்வர் பிறந்த நாள் விழா

திருக்கோவிலுார்: அரகண்டநல்லூரில், தி.மு.க., இளைஞர் அணி சார்பில், பேரூராட்சி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் அன்பு தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர பொருளாளர் காமராஜ், இளைஞரணி அமைப்பாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி சேலை உள்ளிட்டவைகளை வழங்கினார். பேரூராட்சி துணை தலைவர் கதிஜாபிவி, கவுன்சிலர்கள் குமார், மாணிக்கம், வார்டு செயலாளர்கள் செந்தமிழ், ராஜ்மோகன், சண்முகம், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement