வீட்டு மனை பட்டா கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி : வீட்டு மனை பட்டா வழங்க புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா இல்லாத நிலங்களை கணக்கெடுக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். அதில், அனைத்து வட்டங்களிலும் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா இல்லாத நிலங்கள், அரசு விதிமுறைக்கு உட்பட்டு முறையாக கணக்கெடுப்பு செய்திட வேண்டும்; நகரப் பகுதிகளில் வீடுகள் கட்டி வீட்டு மனைப்பட்டா பெறாத நபர்களை கணக்கீடு செய்து தகுதியின் அடிப்படையில் பட்டாக்கள் வழங்க வேண்டும்; ஆண்டு வருமானம் குறைந்தபட்சம், 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள நபர்களுக்கு, வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்