தேசிய லோக் அதாலத் 1,479 வழக்குகளுக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 1,479 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
கள்ளக்குறிச்சி கோர்ட் வளாகத்தில், சட்டப் பணிகள் குழு சார்பில் வாகன விபத்து, சிவில், வங்கி காசோலை வழக்குகளுக்கான, தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சையத் பர்ஹத்துல்லா, தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர்.
நீதிபதி இருசன் பூங்குழலி பேசுகையில், 'கள்ளக்குறிச்சி கோர்ட்டுகளில், 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க மனுதாரர்கள், வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றார்.
தொடர்ந்து நடந்த அதாலத்தில், மொத்தம் 1,479 வழக்குகள், 6 கோடியே 95 லட்சத்து 79 ஆயிரத்து 502 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன.நீதிபதிகள் மைதிலி, தனசேகரன், ஹரிஹரசுதன், பானுமதி, ரீனா, வக்கீல் சங்க தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உளுந்துார்பேட்டையில் நடந்த லோக் அதாலத்திற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி சண்முகம் தலைமை தாங்கினார். நீதிபதி கோமதி முன்னிலை வகித்தார். இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, சிவில் மற்றும் குற்றவியல் என மொத்தம், 270 வழக்குகள், ஒரு கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 558 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்