மகளிர் தின விழா

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சண்முகம் முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் முத்தழகி ஆகியோர் பெண்கள் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து, கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் சமூக நலன் சார்ந்து பணிபுரிந்த பேராசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மினி மாரத்தான்
போலீஸ் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மகளிர் தின விழாவில் 'மினி மாரத்தான்' போட்டி நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், சரோஜினி முன்னிலை வகித்தனர். இதில் குழந்தை திருமணம், வரதட்சணை, சைபர் குற்றங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து காரனுார் பஸ்நிறுத்தம் வரை உற்சாகமாக ஓடினர்.
காங்., கட்சி கொண்டாட்டம்
திருக்கோவிலுாரில் நான்கு முனை சந்திப்பில், காந்தி சிலை அருகில் காங்., சார்பில் நடந்த விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் வரவேற்றார். வட்டார தலைவர்கள் பழனி, பாவாடை முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி தலைவி லதா தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் வாசிம் ராஜா, மகளிருக்கு இனிப்பு மற்றும் புடவைகளை வழங்கினார். தாயுமானவன், வீரவேல், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் சங்கம்
திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் தொழிற்சங்கம் சார்பில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சங்க நிர்வாகி சாந்தி தலைமை தாங்கினார். மீனா, லதா, மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் சரவணன் பேசினார். சங்க தலைவர் அருண்குமார், சட்ட ஆலோசகர்கள் ராதாகிருஷ்ணன், அஜீம் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கினர். சுகந்தி நன்றி கூறினார்.
அ.தி.மு.க., சேலை வழங்கல்
கள்ளக்குறிச்சியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் துப்புரவு தொழிலாளர்களுடன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்களுக்கு சேலை மற்றும் பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, நகர செயலாளர் பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி சார்பில், சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேராசிரியர் நாகித் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்தி பேசினர்.
கல்லுாரி வளாகத்தில் பேரணியை இன்ஸ்பெக்டர் சுமதி, நகராட்சி ஆணையர் திவ்யா கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பெண் குழந்தை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக கோஷங்களை எழுப்பி சென்றனர்.
சுய உதவிக்குழுக்கள் கொண்டாட்டம்
மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டிணம் கிராமத்தில் மகளிர் தின விழா நடந்தது. மகளிர் சுய உதவி குழு தலைவர் புஷ்பவள்ளி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் திருமால், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கினார். சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுவிற்கு தலைமை காவலர் கோகிலா, முதல் நிலை காவலர் ஆஷா பரிசுகளை வழங்கினர். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி பாராட்டி பேசினார்.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்