உபகரணங்கள் வழங்கல்

விருதுநகர் : பிரதமரின் திவ்ய கேந்திரா திட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ. 47. 38 லட்சத்தில் உதவி உபகரணங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் திவ்ய கேந்திரா திட்டத்தில் 118 மாற்றுத்திறனாளுக்கு ரூ. 21. 34 லட்சத்தில் பேட்டரி மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல், சிறப்பு நாற்காலியும், சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் ரூ. 10 லட்சத்தில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கோல், ஸ்மார்ட் போன் 90 மாற்றுத்திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் ரூ. 16.03 லட்சத்தில் 99 பேருக்கு ஸ்மார்ட் போன் என மொத்தம் 307 பேருக்கு ரூ. 47.38 லட்சத்தில் உதவி உபகரணங்களை கலெக்டர் ஜெயசீலன்வழங்கினார்.

Advertisement