கூலி தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே கூலித்தொழிலாளி மரணம் அடைந்தார்.

சின்னசேலம் அடுத்த க.செல்லம்பட்டையை சேர்ந்தவர் கணேசன், 60; திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவு செய்ய, கடந்த 5 ம் தேதி இரவு திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தார்.

அடுத்த நாள், கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement