தீமிதி திருவிழா

பெண்ணாடம் : மாசி திருவிழாவையொட்டி, பெண்ணாடம் அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு வீதியுலா, மும்மூர்த்திகள் பிறப்பு, வீரபத்ரன் படைப்பு, வல்லாலராஜன் கோட்டை இடிப்பு, குடல் பிடுங்கி மாலை போடும் உற்சவம், காட்டேரி வருதல், மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 6:30 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement