த.வெ.க., ஆர்ப்பாட்டம்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடை வீதியில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழக வெற்றிக்கழக கடலுார் வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

துணை செயலாளர் அம்சவள்ளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செலவம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார். ஒன்றிய தலைவர் ஜெயவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி சபிதாலட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காயத்ரி, புவனேஸ்வரி, தீபலட்சுமி, நந்தினி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் கண்டன உரையாற்றினர், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement