ரூ. 5000 ஊக்கத்தொகை கமிஷனர் அனு அறிவிப்பு

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரியை காலகெடுவிற்குள் செலுத்தினால், 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, கமிஷனர் அனு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாநகராட்சியில் பிரதான வருவாயாக சொத்துவரி உள்ளது. ஆனால், பொதுமக்களின் வரி செலுத்தும் பங்களிப்பு குறைவாக உள்ளது. அந்தந்த நிதியாண்டில், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்., 1ம் தேதி முதல் செப்., 30 வரையும், 2ம் அரையாண்டிற்கு அக்., 1 முதல் மார்ச் 31 வரை செலுத்த வேண்டும்.
ஒரு அரையாண்டின் 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால், 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மார்ச் இறுதிக்குள் வரி செலுத்தவில்லை எனில், நிலுவை தொகைக்கு மாதம் தோறும் 1 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். சொத்து வரி தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் நிதிக்குழு மானியம் பெறுவதில் உரிய கால இலக்கை எட்ட இயலாமல் உள்ளது.
எனவே, வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை அனைத்து நாட்களிலும் செயல்படும். மார்ச் 9, 16, 23 மற்றும் 30 ஆகிய நாட்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் அனைத்து மண்டலங்களிலும் காலை 9:00 ணி முதல் மாலை 5:00 வரை நடத்தப்படும்.
இன்று (9ம் தேதி) வன்னியர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, தங்கராஜ் நகர் துவக்கப்பள்ளி, ரெட்டிசத்திரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சீமான் தோட்டம் நடுநிலைப்பள்ளிகளில் நடக்கிறது. மேலும் ஜி.பே, போன் பே, ஆகிய இணையதளங்களிலும் செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்