சட்டசபையில் கவர்னர் உரை  துார்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு

புதுச்சேரி: சட்டசபையில் கவர்னரின் உரையை புதுச்சேரி துார்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

இது குறித்து சட்டசபை செயலர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

15-வது சட்டசபையின் 6-வது கூட்டத்தொடர் இன்று 10ம் தேதி காலை 9:30 மணியளவில் கவர்னர் கைலாஷ்நாதன் உரை யுடன் துவங்குகிறது.

கவர்னரின் உரையை புதுச்சேரி துார்தர்ஷன் தொலைக்காட்சி, நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும், சமூக ஊடகங்களான யூடியூப், பேஸ்புக், டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இது தவிர, உள்ளூர் தொலைக்காட்சி மூலமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement