'வேட்டையனை' இடமாற்றாவிட்டால் பட்டினி போராட்டம்; விவசாயிகள் முடிவு
தொண்டாமுத்தூர்; ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின், மாதாந்திர செயற்குழு கூட்டம் ஆறுமுககவுண்டனூரில், பொதுச்செயலாளர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தமிழகம் முழுவதும் யானைகள், மயில்கள், பன்றிகளால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வனத்தை விட்டு வெளியே வந்து தீங்கு விளைவிக்கின்ற மிருகங்களுக்கு, வன உயிரின பாதுகாப்பு சட்டம் பொருந்தாது என, மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் சங்கம் நீண்ட காலமாக போராடி வருகிறது.
இதனிடையே, மனித உயிர்களை கொள்ளும் வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை தாக்கி நடராஜன் என்ற அப்பாவி இறந்துவிட்டார். ஒற்றைக்காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, விவசாயிகளும், பொதுமக்களும் போராடியதன் விளைவாக முன்னாள் மாவட்ட கலெக்டர், வனத்துறை தலைவருக்கு கடிதம் எழுதி, இடமாற்றம் செய்ய கூறினார். தற்போதுள்ள கலெக்டரும், வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இரண்டு வாரங்களுக்குள் ஒற்றைக்காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், உயிருள்ளவரை பட்டினி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநில செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இளைஞர் அணி தலைவர் நன்றியுரையாற்றினார். ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
கபடி விளையாட்டில் மோதல்; பள்ளி மாணவரை சரமாரியாக வெட்டிய கும்பல்; ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி!
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்