வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து

திருப்பருத்திகுன்றம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கும், திருப்பருத்திகுன்றத்திற்கும் இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட் டுள்ளது. இப்பாலத்தின் வழியாக விப்பேடு, கீழ் கதிர்பூர், மேல்கதிர்பூர், விஷார் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த சிறுபாலத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சிறுபாலத்தின் சுவரில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில், சிறுபாலம் முழுதும் வலுவிழுக்கும் சூழல் உள்ளது.

எனவே, வேகவதி ஆற்று சிறுபாலத்தின் சுவரில் வளரும் அரச மரச் செடிகளை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement