மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

4


ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டிலும் சோதனை நடந்தது.


மதுபான கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு ரூ.2100 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 10) சத்தீஸ்கரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டிலும் சோதனை நடந்தது.



இது குறித்து, சமூக வலைதளத்தில் பூபேஷ் பாகல் கூறியிருப்பதாவது: கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டிற்குள் நுழைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


இந்த சதித்திட்டம் மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸை தடுக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அது தவறான திட்டம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement