பாதை வசதியை முறைப்படுத்த வாலாஜாபாத் வாசிகள் கோரிக்கை
வாலாஜாபாத் : வாலாஜாபாத் பேரூராட்சி, 15வது வார்டுபகுதியில், கலைஞர் கருணாநிதி தெரு உள்ளது.
இத்தெருவில் இருந்து, தேவராஜ் தெருவிற்கு சென்றடையும் வகையில், கடந்த ஆண்டு பேரூராட்சி நிதியின் கீழ், புதியதாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த குறுக்குத் தெரு பாதையை பயன்படுத்தி, இரு தெருக்களைச் சேர்ந்த குடியிருப்புவாசிகளும், பேருந்து நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கருணா நிதி தெருவையும்,தேவராஜன் தெருவையும் இணைக்கும் குறுக்குத் தெரு பகுதியை, தனக்கு சொந்தமானதாக அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், நில அளவீடு செய்து கற்கள் பதித்துள்ளதாக தெரிகிறது.
இதனால், கலைஞர் கருணாநிதி தெருவில் இருந்து, தேவராஜன் தெரு பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பேரூராட்சி சார்பில், நிதி ஒதுக்கீடு செய்து,புதியதாக அமைக்கப்பட்ட சாலை பகுதி எவ்வாறு தனி நபருக்கு சொந்தமானதாகஇருக்கும் என,அப்பகுதியினர் ஆதங்கப்படுகின்றனர்.
மேலும், 15வது வார்டு, குறுக்குத் தெரு வழியை பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும்
-
3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2 இளம் சிறார் மாயம்... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்