காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு

பெரும்பாக்கம்: காஞ்சிபுரத்தில் இருந்து, கீழ்கதிர்பூர், விஷார் வழியாக பெரும்பாக்கம் கிராமத்திற்கு சாலை ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் இருந்தது.

இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து,, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2024 - 25ன் கீழ், 7 மீட்டர் அகலத்திற்கு, 12.8 கி.மீ., நீளத்திற்கு மறு சீரமைப்பு பணியாக கடந்த மாதம் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையின் இருமார்க்கத்திலும் புதிதாக அளவீடு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது,

இக்கற்களில் காஞ்சிபுரம், விஷார், பெரும்பாக்கம், வடஇலுப்பை, ஆற்காடு உள்ளிட்ட ஊர்கள் எத்தனை கி.மீ., துாரத்தில் உள்ளது, உள்ளிட்ட விபரங்களை வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணத்தில் எழுதி வருகின்றனர்.

Advertisement