40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, சர்வதேச மகளிர் தின விழா நேற்று நடந்தது.

இந்த மருத்துவமனை டிரஸ்டி விஸ்வநாதன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், அவரது மனைவி கலைமகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 40 கர்ப்பிணிகளுக்கு, 2,000 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். மருத்துவமனை டிரஸ்டி சங்கர், மருத்துவர்கள் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement