வாக்காளர் பட்டியல் விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

புதுடில்லி: போலி வாக்காளர்களை உருவாக்க பா.ஜ,வுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2-ம் தேதியன்று மேற்குவங் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காக மோசடி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், போன்று போலி வாக்காளர்களை உருவாக்கி, இங்கு தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. எங்கள் மாநிலத்தில் அதுபோல் மோசடி செய்ய விட மாட்டோம் என்றார்.
இந்நிலையில் லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்புகின்றன. வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக பார்லியில் விவாதம் நடத்த வேண்டும் என்றார்.
பின்னர் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை காங். எம்.பி., ராகுல், தனது தங்கை பிரியங்காவுடன், இன்று சந்தித்து பேசினார்.
அப்போது இந்தாண்டு, அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபைகளுக்கு தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். குறிப்பாக வாக்களர்பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் இடம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.









மேலும்
-
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தெப்ப உத்சவம் கோலாகலம்
-
கிரிக்கெட்டில் யூத் சென்டர் வெற்றி பிரசிடென்சி கல்லுாரி அணி ஏமாற்றம்
-
அபிபுல்லா மெமோரியல் அணி டிவிஷன் ஹாக்கி 'லீக்'கில் வெற்றி
-
சென்னை வருமான வரி அணிகள் அகில இந்திய வாலிபாலில் அபாரம்
-
மெத்தையில் பிடித்த சிகரெட் தீ ஐ.டி., ஊழியரின் உயிரை பறித்தது
-
காதலித்த பெண்ணை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய முயன்றவர் கைது